10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளை டிக் டாக்கில் வெளியிட்ட மாணவன்.. அதிரடியாகக் கைது செய்த போலீசார்!

சோதனையை மீறி ஒரு மாணவன் செல்போனை எடுத்துச் சென்று டிக் டாக்கில் வினாத்தாளை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் பொதுத் தேர்வுகளின் போது எந்த பொருட்களும் அறைக்குள் எடுத்துச் செல்ல கூடாது, குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் பலத்த பாதுகாப்பும் சோதனையும் நடைபெறும். அதனை மீறி ஒரு மாணவன் செல்போனை எடுத்துச் சென்று டிக் டாக்கில் வினாத்தாளை வெளியிட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

மேற்கு வங்காளத்தில் தற்போது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆங்கில தேர்வின் போது அந்த வினாத்தாள் டிக் டாக்கில் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் யார் அதனை வெளியிட்டது என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, மால்டா மாவட்டத்தில் உள்ள பைத்தியநாத்பூர் உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவன் அதனை வெளியிட்டது. இதனால், அவரை தேர்வு உடனடியாக கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அந்த மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். 

ttn

பலத்த பாதுகாப்பையும் மீறி அந்த 16 வயது மாணவன் எப்படி செல்போனை உள்ளே எடுத்துச் சென்றார், அவருக்கு யாரேனும் உதவி செய்திருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Most Popular

`வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!’- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் கணவனை மனைவி பிரிந்து சென்றார். தனியாக இருந்த கணவன் ஏரியா தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன்...

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...