10ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது ஏன்? – செங்கோட்டையன் விளக்கம்

 

10ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது ஏன்? – செங்கோட்டையன் விளக்கம்

கொரோனா ஊரடங்கு இன்னும் முடியவில்லை, சில மாநிலங்கள் இம்மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. சென்னையில் வேகமாக தொற்று பரவி வருகிறது. போக்குவரத்து வசதி எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.

கொரோனா ஊரடங்கு இன்னும் முடியவில்லை, சில மாநிலங்கள் இம்மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. சென்னையில் வேகமாக தொற்று பரவி வருகிறது. போக்குவரத்து வசதி எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. மக்கள் இயல்புநிலைக்குத் திரும்புவது எப்போது என்று தெரியவில்லை. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதியை பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

sslc-exam.jpg

இந்த நிலையில் தேர்வு தேதி அறிவித்தது ஏன் என்ற விளக்கத்தை செங்கோட்டையன் அளித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “10-ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதற்காக இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதனடிப்படையில் ஜூன்-01 லிருந்து ஜூன்-12 வரை மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும் செய்துதர மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.அதனடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அதனை முழுமையாக செயல்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டிருந்த மற்றொரு ட்வீட் பதிவில், “26.03.2020 அன்று நடக்காத 11-ம் வகுப்புக்கான தேர்வை 02.06.2020 அன்று எழுதுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

+2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் (Valuation) பணிகள் மே-27 ம் தேதியிலிருந்து அந்தந்த முகாம்களில் நடைபெறும்.” என்று கூறியுள்ளார்.