10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர், பெற்றோர் பெயர் அச்சிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர், பெற்றோர் பெயர் அச்சிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர், பெற்றோர் பெயர் அச்சிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசின் நீட் பயிற்சி வகுப்பு மூலம், இந்த ஆண்டு குறைந்தது அரசுப் பள்ளி மாணவர்கள்100 மாணவர்களாவது அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வார்கள். மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் பெயர் மாற்றப்படுகிறது.

அமைச்சர் செங்கோட்டையன்

இனி மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளியின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வு முதற்கொண்டு அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்” என தெரிவித்தார்.