“1 கிலோ கேக் வாங்குங்க; 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வாங்கிட்டு போங்க”: அசத்தல் அறிவிப்பு

 

“1 கிலோ கேக் வாங்குங்க; 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வாங்கிட்டு போங்க”: அசத்தல் அறிவிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும், இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர் ஏற்றத்தை கண்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90ஐ எட்டியிருப்பது வாகன ஓட்டிகளை அதிருப்தி அடையச் செய்திருக்கிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.93.11, டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கேக் உரிமையாளர் ஒருவர் அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

“1 கிலோ கேக் வாங்குங்க; 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வாங்கிட்டு போங்க”: அசத்தல் அறிவிப்பு

திருச்சி ஹீபர் ரோட்டில் நீதிமன்றம் அருகில் உள்ளது கேக் எக்ஸ்பிரஸ் பேக்கரி. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த பேக்கரியில் ஆர்டர் செய்தால் சுட சுட தின்பண்டங்கள் தயார் செய்து விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாகஇங்கு சுவையாக தயாரிக்கப்படும் கேக்குகள், ரூ.600 முதல் ரூ.1200வரை விற்பனை செய்யப்படுகிறது.

“1 கிலோ கேக் வாங்குங்க; 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வாங்கிட்டு போங்க”: அசத்தல் அறிவிப்பு

இங்கு ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு கேக் வாங்கி கொண்டு அவர்கள் தரும் டோக்கனை சில குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகளுக்கு சென்று காண்பித்தால் பெட்ரோலை இலவசமாக பெற்று கொள்ளலாம். இதுகுறித்து கூறும் அக்கடையின் உரிமையாளர், இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. பெட்ரோல் இலவசம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இது வாடிக்கையாளர்களை கவர ஒரு சூசகமான அறிவிப்பு என்றார்.