9 நாட்களில் 1 கோடி பரிசோதனைகள் – இந்தியாவில் கொரோனா

 

9 நாட்களில் 1 கோடி பரிசோதனைகள் – இந்தியாவில் கொரோனா

கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளில் இந்தியாவும் இன்று. ஒரு மாதத்திற்கு மேலாக, உலகளவில் புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது. சமீப சில வாரங்களாக அமெரிக்கா முதல் இடத்திற்கு வந்துவிட்டது.

ஜனவரி 2020-இல் இருந்து  கோவிட்-19  பரிசோதனைகளின்  எண்ணிக்கை  இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

9 நாட்களில் 1 கோடி பரிசோதனைகள் – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த 9 நாட்களில் மட்டும் 1 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆறு வாரங்களில் தினமும் சுமார் 11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தினமும் 15 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,75,760 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இது வரை மொத்தம் 10.65 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (10,65,63,440).

9 நாட்களில் 1 கோடி பரிசோதனைகள் – இந்தியாவில் கொரோனா

தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் இன்று 7.54 சதவீதமாக குறைந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி, தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 6,03,687 ஆக உள்ளது. மொத்த மதிப்புகளில் இது வெறும் 7.51 சதவீதம் ஆகும். இது வரை 73 லட்சத்துக்கும் அதிகமானோர் (73,15,989) குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56,480 பேர் குணமடைந்துள்ளனர். புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 49,881 ஆக உள்ளது. குணமடைந்தவர்களில் 79 சதவீதம் பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளனர்.

9 நாட்களில் 1 கோடி பரிசோதனைகள் – இந்தியாவில் கொரோனா

கொரோனா நோயாளிகள் குணமாகும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஆறாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்ட்ராவும் இரண்டாம் இடத்தில் கேரளாவும் உள்ளன.

புதிய நோயாளிகள் அதிகரிக்கும் தினசரி பட்டியலில் தமிழ்நாடு ஏழாம் இடத்தில் உள்ளன. . முதல் இடத்தில் கேரளாவும் இரண்டாம் இடத்தில் மகாராஷ்ட்ராவும் உள்ளன.

தினசரி மரணங்களின் எண்ணிக்கை பட்டியலில் தமிழ்நாடு ஏழாம் இடத்திலும் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்ட்ராவும் இரண்டாம் இடத்தில் மேற்கு வங்கமும் உள்ளன.