இந்தியாவில் இதுவரை 1.93 கோடி மாதிரிகள் பரிசோதனை – ஐசிஎம்ஆர் தகவல்

 

இந்தியாவில் இதுவரை 1.93 கோடி மாதிரிகள்  பரிசோதனை – ஐசிஎம்ஆர் தகவல்

சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6 லட்சத்து 82 ஆயிரத்து 885 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 1 கோடியே 11 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 1.93 கோடி மாதிரிகள்  பரிசோதனை – ஐசிஎம்ஆர் தகவல்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை16,95,988 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10. 94 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 57,118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 764 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை இந்தியா முழுவதும் 1.93 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மொத்தமாக 1,93,58,659 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் 5,25,689 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.