“இரண்டு கோடி இளைஞர்களை தெருக்கோடியில் நிறுத்திய கொரானா” -இரண்டாம் உலகப்போரை விட மோசமான நிலையை நோக்கி இந்திய பொருளாதாரம் .

“இரண்டு கோடி இளைஞர்களை  தெருக்கோடியில் நிறுத்திய கொரானா” -இரண்டாம் உலகப்போரை விட மோசமான நிலையை நோக்கி  இந்திய பொருளாதாரம் .

கடந்த ஐந்து மாதங்களாக கொரானா பரவல் தொடங்கிய நாள் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள் திடீர் ஆள்குறைப்பு செயதுள்ளது .இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த ஆகஸ்டு மாதம் வரை கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர் வேலையிழந்துள்ளதாக சி.எம்.ஐ. இ. என்ற அமைப்பு எடுத்த புள்ளி விவிரம் தெரிவித்துள்ளது .சென்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எகானமி என்ற இந்த நிறுவனம் எடுத்த ஆய்வில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த வேலையிழப்பு இன்னும் தொடர்ந்து பலரின் குடும்பத்தை வறுமையில் தள்ளியதாக கூரியுள்ளது .

“இரண்டு கோடி இளைஞர்களை  தெருக்கோடியில் நிறுத்திய கொரானா” -இரண்டாம் உலகப்போரை விட மோசமான நிலையை நோக்கி  இந்திய பொருளாதாரம் .
மேலும் அதன் கணக்கெடுப்பில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்தியாவில் இப்படி ஒரு பொருளாதார நெருக்கடி வருவது இதுதான் முதல் முறை இது இந்நிலை தொடர்ந்தால் அதை விட மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்பிருப்பதாக அது கூறியுள்ளது
மேலும் பல சிறு தொழில் நிறுவனங்களும் ,அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள் என்றும் ,இதனால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை 31 லட்சத்திலுந்து 33 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் அது கூறியுள்ளது .அதாவது அவர்களின் விகிதம் 2.5 சதவீதம் உயர்ந்துள்ளது .மேலும் பல நிறுவனங்கள் சம்பள குறைப்பும் செய்து பலரின் குடும்பங்களை வறுமையில் தள்ளியுள்ளது என்று கூறியுள்ளது .
சர்வதேச நாணயத்தின் கணக்குப்படி உலக பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 4-5.5 சதவீதமும் ,இந்திய பொருளாதாரம் 3.2 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது

“இரண்டு கோடி இளைஞர்களை  தெருக்கோடியில் நிறுத்திய கொரானா” -இரண்டாம் உலகப்போரை விட மோசமான நிலையை நோக்கி  இந்திய பொருளாதாரம் .