1.86 லட்சம் கோடிக்கு மட்டுமே நிவாரணம் அறிவிப்பு… ப.சிதம்பரம் கண்டுபிடிப்பு

1.86 லட்சம் கோடிக்கு மட்டுமே நிவாரணம் அறிவிப்பு… ப.சிதம்பரம் கண்டுபிடிப்பு

கொரோனாவை எதிர்கொள்ள பொருளாதார ஊக்கத் திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன் அடிப்படையில் ஐந்து நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்.

நிர்மலா சீதாராமன் அறிவித்த நிவாரண திட்டத்தின் மதிப்பு வெறும் 1.86 லட்சம் கோடிதான் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை எதிர்கொள்ள பொருளாதார ஊக்கத் திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன் அடிப்படையில் ஐந்து நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்.

niramla-sitharamn

எல்லா துறைகளிலும் தனியாரை அனுமதிப்பது, ராணுவத்தில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பது, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி துறைகளில் கூட தனியாரை அனுமதிப்பது என்று மிகப்பெரிய பட்டியலையே நிர்மலா சீதாராமன் வாசித்தார். கொரோனாவுக்கும் தனியார் மயத்துக்கும் என்ன சம்பந்தம், அதிலும் கொரோனா நிவாரணத்துக்கும் விண்வெளி துறைக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆன்டி இந்தியன் ஆக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் பலரும் வாய் மூடி மௌனமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான் . ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்” என்று கூறியுள்ளார்.