இவ்வளவு பேர் ஓட்டு போடலையா?.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இவ்வளவு பேர் ஓட்டு போடலையா?.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களின் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வளவு பேர் ஓட்டு போடலையா?.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நடந்து முடிந்த தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33%, குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு பேர் ஓட்டு போடலையா?.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக எவ்வளவு பேர் வாக்களித்தனர் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்றும் 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்றும் ஆண்கள் – 2.26 கோடி, பெண்கள் – 2.31 கோடி, 3ஆம் பாலினத்தவர்கள் – 1,419 பேர் வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக 72.81% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.