1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் – பிளிப்கார்ட், அமேசான் திட்டம்!

1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் – பிளிப்கார்ட், அமேசான் திட்டம்!

கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பின்னால் மக்களின் நுகர்வு தேவை அதிகரித்து வருவதால், புதிதாக 1.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் – பிளிப்கார்ட், அமேசான் திட்டம்!

வரும் பண்டிகை நாட்களை முன்னிட்டு, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், டோர் டெலிவரி நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக உள்ள்ன. இந்த வேலை வாய்ப்புகள் வரும் மாதங்களில் இருந்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் – பிளிப்கார்ட், அமேசான் திட்டம்!

அமேசான் நிறுவனம் பொருட்களை டெலிவரி செய்யும் பணிக்கு கூடுதலாக 20 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசான் நிறுவனம் கடந்த மே மாதம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், இந்தியாவில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது பண்டிகை கால விற்பனைக்கு ஏற்ப பணியாளர்களை அதிகரிக்க உள்ளது.

1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் – பிளிப்கார்ட், அமேசான் திட்டம்!

பிளிப்கார்ட் நிறுவனத்தின் ’பிக் பில்லியன் டே’ விற்பனை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதையொட்டி, பொருள்களை விநியோகிக்கும் துறையில் சுமார் 70 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்த பலருக்கும், வரும் பண்டிகை காலம் புதிய வேலை வாய்ப்பினை வழங்க உள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.