1.50 லட்சம் மக்கள் இறப்பது குறித்து உங்களுக்கு கவலை இல்லையா? நிதின் கட்கரி ஆவேசம்

 

1.50 லட்சம் மக்கள் இறப்பது குறித்து உங்களுக்கு கவலை இல்லையா? நிதின் கட்கரி ஆவேசம்

அதிக அபராதம் விதிக்கப்படுவதாக கவலைப்படும் நீங்கள், போக்குவரத்து விதிமீறல்களால் 1.50 லட்சம் பேர் இறப்பது குறித்து கவலை இல்லையா என நிதின் கட்கரி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை உயர்த்தி அமைத்தது வருவாய் நோக்கத்துக்காக அல்ல. ஆனால் மக்ககளின் உயிரை  காப்பதற்காக. இது வருவாய் ஆதார திட்டமில்லை.

விபத்து

போக்குவரத்து விதிமீறல்களால் 1.50 லட்சம் பேர் உயிர் இழப்பது குறித்து உங்களுக்கு கவலை இல்லையா? மாநில அரசுகள் அபராத தொகையை குறைக்க விரும்பினால், மக்கள் சட்டத்தை பின்பற்றுவதில்லை அல்லது பயப்படுவதில்லை என்பது உண்மையல்லவா? போக்குவரத்துக்கு விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை அதிகரிப்பு என்ற மத்திய அரசின் நடவடிக்கை விபத்துக்களை குறைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாகன சோதனை

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. பல மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தி விட்டன. அதேசமயம் குஜராத் அரசு அபராத தொகையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.