சென்னையில் 1.5 லட்சம் பேருக்கு டெஸ்ட் செய்யப் போகிறோம்! – அதிர்ச்சி கிளப்பும் தமிழக அரசு

 

சென்னையில் 1.5 லட்சம் பேருக்கு டெஸ்ட் செய்யப் போகிறோம்! – அதிர்ச்சி கிளப்பும் தமிழக அரசு

சென்னையில் மட்டும் 25 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 1.5 லட்சம் பேருக்கு டெஸ்ட் செய்யப் போகிறோம்! – அதிர்ச்சி கிளப்பும் தமிழக அரசுதமிழகத்தில் கொரோனா பரவாது என்று தமிழக அரசு சட்டமன்றத்திலேயே கூறியது. அதற்கு கொரோனா பதிலடி கொடுத்தது போல தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அலை கழிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. பிரபல மருத்துவர்கள் எல்லாம் தாங்கள் சந்தித்த பிரச்னைகள் பற்றிய பதிவுகளை அவ்வப்போது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழக அரசின் அலட்சியம் காரணமாக சென்னையில் 25 லட்சம் பேருக்கு கொரோனா இருக்கலாம் என்றும் பகீர் தகவலை வெளியிட்டது பிரபல வார இதழ் ஒன்று.
இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள முதியவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள் என 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் 30பேருக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது, கல்வித் துறை அலுவலகம், போலீஸ் நிலையம், பத்திரிகை அலுவலகங்கள் என கொரோனா எல்லா இடங்களிலும் கைவரிசை காட்டி வருகிறது. ஆனாலும் அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுத்தது போல இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.