உற்பத்தித் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி சலுகைகள்: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!

உற்பத்தித் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி சலுகைகள்: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!

வாகனங்கள், ஜவுளி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி சலுகைகள் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

உற்பத்தித் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி சலுகைகள்: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!

டெல்லியில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், உற்பத்தி துறைக்கு சலுகைகள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகவும் சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தவும் இந்த சலுகைகள் வழங்கப்படுவதாகவும் ஏசி, எல்இடி பல்ப் உள்ளிட்ட துறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதே போல மருத்துவம் மற்றும் மின்னணு துறைகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

உற்பத்தித் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி சலுகைகள்: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வாகனங்கள், ஜவுளி உள்ளிட்ட 10 முக்கிய துறைகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அந்தந்த தொழிற்சாலைகளின் உற்பத்திக்கு ஏற்றாற்போல சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.