1.5 லட்சம் பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த நாடு இதுதான்

 

1.5 லட்சம் பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த நாடு இதுதான்

கொரோனா பேரழிவு பெரும் எண்ணிக்கையில் அதிகரித்துகொண்டே உள்ளது. குறிப்பாக, இறப்பவர்களின் எண்ணிக்கை பெரும் கவலையை அளிக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 83 லட்சத்து 70 ஆயிரத்து 296 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 88 லட்சத்து 53 ஆயிரத்து 887 நபர்கள்.

1.5 லட்சம் பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த நாடு இதுதான்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 90 ஆயிரத்து 919 பேர். நேற்று மட்டுமே 5,011 பேர் இறந்திருக்கிறார்கள்.

கொரோனா தொற்று தொடங்கியது முதலே ஆபத்தில் சிக்கியது பிரேசில்.பிரேசில் நாட்டில் இதுவரை கொரோனாவின் மொத்த பாதிப்பு 51 லட்சத்து 14 ஆயிரத்து 823 பேர். அவர்களில் 45,26,975 பேர் குணம் அடைந்துவிட்டார்.

1.5 லட்சம் பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த நாடு இதுதான்

தற்போது சிகிச்சையில் இருப்போர் 4 லட்சத்து 36 ஆயிரத்து 785 பேர். இவர்களில் 2 சதவிகித பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

பிரேசிலில் மார்ச் 17-ம் தேதி கொரோவின் முதல் மரணம் நடந்தது. ஜூன் மாதம் 20-ம் தேதி இறப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்தது. ஆகஸ்ட் 08-ம் தேதி ஒரு லட்சமாக அதிகரித்தது. நேற்று அது 1 லட்சத்து 5 ஆயிரத்தைக் கடந்து விட்டது.

1.5 லட்சம் பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த நாடு இதுதான்

பிரேசிலில் இறப்பு விகிதம் 3 சதவிகிதமாக உள்ளது. உலக இறப்பு விகிதம் 4 ஆக உள்ளது.

பிரேசிலில் கடந்த சில வாரங்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.