1.5 சதவிகிதமாக சரிவு – இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம்

1.5 சதவிகிதமாக சரிவு – இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம்

கொரோனாவில் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் இன்று. 80 லட்சம் பேருக்கு மேல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் விகிதம் 1.5 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது. இன்று உயிரிழந்தோரின் விகிதம் 1.49 சதவீதம் ஆக இருக்கிறது.

1.5 சதவிகிதமாக சரிவு – இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம்

கடந்த 24 மணி நேரத்தில் 59,454 பேர் குணம் அடைந்துள்ளனர். புதிதாக தொற்றுப் பதிவானவர்கள் எண்ணிக்கை 48,268 ஆக உள்ளது. 

இந்தியாவில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போக்கு நிலவுகிறது. தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 5,82,649 ஆக இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 லட்சத்துக்கும் கீழே இருக்கிறது.

1.5 சதவிகிதமாக சரிவு – இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம்

10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் புதிதாக  குணம் அடைந்தோரின் விகிதம் 79% ஆக இருக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரு நாளில் அதிக அளவில் குணம் பெற்றோர் எண்ணிக்கை 8,000-க்கும் அதிகமாக இருக்கிறது. கேரளாவில் ஒரே நாளில் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 7,000-க்கும் அதிகமாக இருக்கிறது.

1.5 சதவிகிதமாக சரிவு – இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம்

கடந்த 24 மணி நேரத்தில் 551 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 83% மரணங்கள் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நிகழ்ந்துள்ளது.  மகாராஷ்டிராவில் புதிதாக உயிரிந்தோரின் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக (127) இருக்கிறது.

1.5 சதவிகிதமாக சரிவு – இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம்

இந்திய மாநிலங்களில் கொரோனாவினால் குணமடையும் பட்டியலில் தமிழ்நாடு ஆறாம் இடத்திலும் புதிய நோயாளிகள் பட்டியலில் ஏழாம் இடத்திலும் தினசரி மரணிப்போர் எண்ணிக்கை பட்டியலில் ஆறாம் இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.