‘1.48 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ தேர்வு எழுதவில்லை’- மத்திய அரசு தகவல்

 

‘1.48 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ தேர்வு எழுதவில்லை’- மத்திய அரசு தகவல்

இந்த ஆண்டு நடைபெற்ற ஜே.இ.இ தேர்வை 1.48 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் செமெஸ்டர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வாக நடத்தப்படும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. ஆனால், தேர்வுகள் திட்டமிட்டப்படி கட்டாயம் நடைபெறும் என்றும் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படாது என்றும் தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

‘1.48 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ தேர்வு எழுதவில்லை’- மத்திய அரசு தகவல்

அதன் படி கடந்த 1ம் தேதி முதல் ஜேஇஇ தேர்வும், கடந்த 13 ஆம் தேதி நீட் தேர்வும் நாடு முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டது. கொரோனா அச்சத்தால் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் பலர் தேர்வெழுதவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில், சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வை எழுதவில்லை என மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜேஇஇ மற்றும் நீட் தேர்வெழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது என்பது நினைவு கூரத்தக்கது.