1.47 லட்சம் கார்கள் விற்பனையாச்சு…. இருந்தாலும் மாருதி சுசுகிக்கு ஏமாற்றம்…..

 

1.47 லட்சம் கார்கள் விற்பனையாச்சு…. இருந்தாலும் மாருதி  சுசுகிக்கு ஏமாற்றம்…..

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த பிப்ரவரியில் மொத்தம் 1.47 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இருப்பினும் சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது விற்பனை 1 சதவீதம் குறைவாகும்.

நம் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரியில் மொத்தம் 1.47 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. 2019 பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1.48 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தது. ஆக, சென்ற மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை 1.1 சதவீதம் குறைந்துள்ளது.

மாருதி சுசுகி கார்  ஷோ ரூம்

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் சென்ற மாதம் உள்நாட்டில் 1.36 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 2019 பிப்ரவரியில் உள்நாட்டில் 1.39 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தது. 2020 பிப்ரவரியில் இந்நிறுவனம் 10,261 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2019 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 7.1 சதவீதம் அதிகமாகும். சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனம் 9,582 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்து இருந்தது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நம் நாட்டில் பி.எஸ்.6 என்ஜின் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறை அமலுக்கு வர உள்ளது. இருந்தாலும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் சென்ற ஆண்டை பி.எஸ்.6 ரக மாடல் கார்களை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது. லட்சக்கணக்கான கார்களை விற்பனையும் செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.