கொரோனாவுக்கு இதுவரை 1.36 லட்சம் பேர் உயிரிழப்பு!

 

கொரோனாவுக்கு இதுவரை 1.36 லட்சம் பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், உலக நாடுகளில் இரண்டாம் கட்ட அலையில் கொரோனா இருப்பதால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்தியாவின் சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்தவாறு இருந்ததால் பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பினாலும், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

கொரோனாவுக்கு இதுவரை 1.36 லட்சம் பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 41,322 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 93,51,110 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 485 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,36,200 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 87,59,969 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், தற்போது 4,54,940பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.