“தமிழர்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் ரூ.1.27 லட்சம் கடன்” – வெளியான பகீர் அறிக்கை!

“தமிழர்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் ரூ.1.27 லட்சம் கடன்” – வெளியான பகீர் அறிக்கை!

சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்ட் விடுதியில் பாமக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2021 – 22ஆம் நிதியாண்டிற்கான 19ஆவது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

“தமிழர்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் ரூ.1.27 லட்சம் கடன்” – வெளியான பகீர் அறிக்கை!

2021-22ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்க நேரிடும். 2021-22ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.6 லட்சம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனக் கடன் ரூ.4 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும். மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும். நடப்பாண்டின் முடிவில் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1,27,388.54 கடன் இருக்கும். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5,09,554 கடனை அரசு வாங்கியிருக்கும்.

“தமிழர்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் ரூ.1.27 லட்சம் கடன்” – வெளியான பகீர் அறிக்கை!

2021-22ஆம் ஆண்டில் வட்டியாக மட்டும் ரூ.85,000 கோடி செலுத்த வேண்டியிருக்கும். இதில், நேரடிக் கடனுக்கான வட்டி ரூ.51,000 கோடி; பொதுத்துறை நிறுவன கடன்களுக்கான வட்டி ரூ.34,000 கோடி; ஒவ்வொரு நாளும் ரூ.232 கோடி கடன் செலுத்த வேண்டியிருக்கும். நிலைமையைச் சரிசெய்ய மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

“தமிழர்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் ரூ.1.27 லட்சம் கடன்” – வெளியான பகீர் அறிக்கை!

மத்திய அரசு வசூலிக்கும் மேல்வரி, கூடுதல் தீர்வை போன்றவை அடிப்படை வரியோடு இணைக்கப்பட வேண்டும். அதன் மூலம், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.