1.24 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை! – அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு தகவல்

1.24 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை! – அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு தகவல்

சென்னையில் கொரோனா பாதிப்பு எதிர்கொள்வது தொடர்பான சுகாதாரத் துறையின் அவசரக் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்வின்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் இதுவரை 1,24,870 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 88 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 1.24 லட்சம் பேரிடம் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு எதிர்கொள்வது தொடர்பான சுகாதாரத் துறையின் அவசரக் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்வின்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் இதுவரை 1,24,870 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 88 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
சோதனைச் சாவடிகளில் வாகன ஒட்டிகளை பரிசோதனை செய்யவும் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. 

corona virus

60 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார். பள்ளி, கல்லூரி, நகராட்சிகளை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பை சிறப்பாக செய்து வருகிறோம். இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நமக்கும் அச்சம்தான். அதனால் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்ற ஒருவர் நலமடைந்தார். அவர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் எல்லோருக்கும் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். ஒரு சிலர் பாதிப்படைந்த நாட்டிலிருந்து வந்ததால் பதற்றம் அடைந்து மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.

corona

யாருக்கு பரிசோதனை செய்வது என்பதை மருத்துவர்கள்தான் முடிவு செய்வார்கள். வெறும் பதற்றத்தோடு வருபவர்களுக்கு எல்லாம் பரிசோதனை செய்ய முடியாது. தற்போது இப்படி பதற்றத்தோடு வருபவர்களுக்கு கவுன்சலிங் வழங்கவும், தேவை எனில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கவும், ரத்தப் பரிசோதனை செய்யவும் அறிவுரை வழங்கியுள்ளோம்” என்றார்.