சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

 

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாகப் பரவி வரும் நிலையில் சென்னையில் தான் அதிக அளவு தொற்று பரவியிருக்கிறது. சென்னையில் மட்டுமே மொத்த பாதிப்பு 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் மக்கள் தங்களின் உயிரைக் காத்துக் கொள்ள மற்ற மாவட்டங்களுக்குப் படையெடுத்தனர். அதன் காரணமாக, சென்னையிலிருந்து சென்றவர்களின் மூலம் மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகி வருகிறது. அதனால் சென்னை மக்கள் வெளிவட்டங்களுக்குச் செல்ல முடியாத வண்ணம் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதே போலச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமை படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

இந்த நிலையில் சென்னை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் சென்னையில் மட்டுமே 1.20 லட்சம் வீடுகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு உதவி 4,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 200 வார்டுகளை கொண்ட சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் 2 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முகாம்கள் குறித்து மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் கொடுக்கப்படுவதாகவும் தற்போது மக்கள் அதிகமாக வருவதால் கொரோனா பரிசோதனை அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.