1-10ம் வகுப்பு வரை கட்டாய கலைக்கல்வி! – வழிகாட்டுதலை வெளியிட்ட சி.பி.எஸ்.இ

1-10ம் வகுப்பு வரை கட்டாய கலைக்கல்வி! – வழிகாட்டுதலை வெளியிட்ட சி.பி.எஸ்.இ

வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலை கல்வி மற்றும் கலையுடன் சேர்ந்து கற்றல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலை கல்வி மற்றும் கலையுடன் சேர்ந்து கற்றல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

cbse-arts-class

கலைக் கல்வி மற்றும் கலை சார்ந்த கற்றல் தொடர்பாக சி.பி.எஸ்.இ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியக் கலை, கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு கலை படிப்பு இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை ஒரு கலைப் பாடத்தை எடுத்துப் படிக்க வேண்டும். இந்த 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு ஆண்டாவது வேறு ஒரு மாநிலத்தைச் சார்ந்த கலைப் பாடத்தை எடுத்து படிக்க வேண்டும். இந்த பாடத்திற்கான மதிப்பும், மாணவர் தேர்ச்சியில் சேர்க்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.