1 + 1 = 3? நிஜமாவா பிரியங்கா சோப்ரா?

 

1 + 1 = 3? நிஜமாவா பிரியங்கா சோப்ரா?

வாரத்திற்கு ஏழு நாட்களும் கடுமையாக உழைப்பது பிரியங்கா சோப்ராவின் மக்கள் தொடர்பு அலுவலர்கள்தான்

வாரத்திற்கு ஏழு நாட்களும் கடுமையாக உழைப்பது பிரியங்கா சோப்ராவின் மக்கள் தொடர்பு அலுவலர்கள்தான். இருக்காதா பின்னே? தன்னைவிட 10 வயது குறைவானவரை காதலித்தது முதல், கல்யாணம் செய்தது, பிறகு இருவரும் பிரிந்ததாக செய்தி வெளியானது, அதற்கு மறுப்பு தெரிவித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது, மெட் காலா நிகழ்ச்சிக்கு வித்தியாசமான உடை/சிகை அலங்காரத்தில் வந்தது என ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து தொடர்ச்சியாக செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருப்பதற்கெல்லாம், பத்து நிகில் முருகன்கள் தேவைப்படுவார்கள்.

priyanga

ரொம்ப லெங்க்த்தா போவுது, மூடிட்டு செய்தியை சொல்லுன்னு கடுப்பாகும் அன்பர்களே, இது நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்தி அல்ல, நல்ல செய்தி. சோப்ரா மாங்கா கடிக்கப் போகிறார். ஏன், பிரியங்கா பாமகவுலே சேர போறாங்களா அப்படீன்னு ஃபிரென்ட்ஸ் பட சார்லி மாதிரி முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு கேட்கும் முரட்டு சிங்கிள்களுக்கு இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும். வாயும் வயிறுமாக இருக்கிறார்  பிரியங்கா சோப்ரா. அவங்க வாந்தி எடுக்குறதை பாத்தியா, இல்ல ஸ்கேன் ரிப்போர்ட்ட பாத்தியா என்றெல்லாம் நோ க்ராஸ்கொஸ்டின். கேன்ஸ் பட விழாவிற்கு தன் கணவருடன் (ஆம்பளைங்க பேர எல்லாம் எழுதி தேவை இல்லாம நேரத்தை வீணடிக்கிறது  கம்பெனி பாலிசி அல்ல) வந்திருந்த பிரியாங்காவின் போட்டோவை பார்த்துவிட்டுத்தான் இந்த செய்தி பரவுகிறது.

priyanka

ஆக, இது உண்மை செய்தியா இல்லை இதுவும் மக்கள் தொடர்பு அக்கவுண்டில் சேருமா என்பதை தெரிந்துகொள்ள காத்திருப்போம். நாட்ல எவ்வளவோ பிரச்னை இருக்கு, குடிக்க தண்ணி இல்ல, கரண்ட் கட் ஆகுது இதெல்லாம் பத்தி பேசாம, பிரியங்கா சோப்ரா முழுகாம இருந்தா என்ன, குடி முழுகி போனா என்ன முறுக்கும் சமூக நல ஆர்வலர்களே, ஷோல்டர்ஸ் டவுன் ப்ளீஸ். பிரியங்கா சோப்ரா செய்தி என்றவுடன் லிங்கை ஆசையாக க்ளிக் பண்ணி, இன்னைக்கி என்ன மாதிரியான ட்ரெஸ்ன்னு பாக்கதானே வந்தீங்க?