1.09 கோடி மரங்களை வெட்டி தள்ளிய மத்திய அரசு… அவங்கதான் வளர்க்கவும் சொல்லுவாங்க…

 

1.09 கோடி மரங்களை வெட்டி தள்ளிய மத்திய அரசு… அவங்கதான் வளர்க்கவும் சொல்லுவாங்க…

கடந்த 5 ஆண்டுகளில் 1.09 கோடி மரங்களை வெட்டி சாய்க்க அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தற்போது மரம் வளர்ப்பில் சாமானிய மனிதர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநில, மத்திய அரசுகளும் மரம் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் சொல்லும் அரசே கோடிக்கணக்கான மரங்களை வெட்டி சாய்க்க அனுமதி கொடுத்துள்ளது.

மரம் வெட்டுதல்

மேம்பாட்டு பணிகளுக்கான மரங்களை வெட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மரம் வெட்டப்பட்டது தொடர்பான கேள்விக்கு மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை இணைஅமைச்சர் பாபுல் சுப்ரியோ பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலத்தில் மேம்பாட்டு பணிகளுக்காக 1.09 கோடி மரங்களை வெட்ட எனது அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. காடுகளில் தீயால் எரிந்து போன மரங்கள் குறித்த புள்ளிவிவரங்களை எனது துறை பராமரிப்பது கிடையாது என்று கூறினார்.

பாபுல் சுப்ரியோ

மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் ஆண்டு வாரியாக மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தது தொடர்பான புள்ளிவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு     வெட்ட அனுமதி 
2014-15      23.3 லட்சம் மரங்கள்
2015-16      16.9 லட்சம் மரங்கள்
2016-17      17.1 லட்சம் மரங்கள்
2017-18      25.5 லட்சம் மரங்கள்
2018-19      26.91 லட்சம் மரங்கள்