சென்னை மாநகராட்சியில் 1.07 கோடி மாஸ்க் விநியோகம்: அமைச்சர் வேலுமணி

சென்னை மாநகராட்சியில் 1.07 கோடி மாஸ்க் விநியோகம்: அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக மக்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் 1.07 கோடி மாஸ்க் விநியோகம்: அமைச்சர் வேலுமணி

அதன்படி ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கப்படவுள்ளது. அதே சமயம் சென்னையில் வீடு வீடாக சுகாதார பணியாளர்கள் இலவச மாஸ்க்கை வழங்கி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் 1.07 கோடி மாஸ்க் விநியோகம்: அமைச்சர் வேலுமணி

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, “சென்னை மாநகராட்சியில் 1.17 கோடி மாஸ்க்குகள் கொள்முதல் செய்யப்பட்டு 1.07 கோடி மாஸ்க் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 6.17 லட்சம் கையுறைகள் கொள்முதல் செய்யப்பட்டு 3.84 லட்சம் கையுறைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் 6.75 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.