ஊரடங்கில் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழப்பு: மத்திய அரசு தகவல்!

 

ஊரடங்கில் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழப்பு: மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் ஊரடங்கின் போது 1.04 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு அமலில் இருந்தது. பிறகு, பிரதமர் மோடி நாடு முழுவதும் அன்லாக் அறிவித்த போது ஊரடங்கை நீடிப்பதையும் தளர்வுகள் அளிப்பதையும் அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தார். அதன் படி தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநில அரசுகள் ஊரடங்கை நீடித்தன.

ஊரடங்கில் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழப்பு: மத்திய அரசு தகவல்!

ஊரடங்கின் போது பல தொழில்கள் முடங்கியதால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு புலம்பெயர்ந்து பணியாற்றிய தொழிலாளிகள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் புலம்பெயர்ந்த மாநிலங்களில் சிக்கிக் கொண்டு உணவு கிடைக்காமல் தவித்த அவல நிலையும் ஏற்பட்டது. அதன் பிறகு, மாநில அரசுகளின் நடவடிக்கையின் மூலம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் 1.04 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த மாநிலம் திரும்பியதாக, தொழிலாளர் நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. திமுக எம்பி திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு, அதிகபட்சமாக 32.39 லட்சம் பேர் வேலை இழந்து உத்திர பிரதேசம் திரும்பியதாகவும் தமிழகத்தை சேர்ந்த 72.145 பேர் வேலை இழந்து தமிழகம் திரும்பியதாகவும் தொழிலாளர் நல அமைச்சகம் எழுத்துபூர்வ பதில் அளித்துள்ளது.