‘1 லிட்டர் பாலில் 1 பக்கெட் தண்ணி’ : தொடரும் அரசுப் பள்ளியின் அவலம் !

‘1 லிட்டர் பாலில் 1 பக்கெட் தண்ணி’ : தொடரும் அரசுப் பள்ளியின் அவலம் !

இவர்களுக்கு நேற்று முன் தினம் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பால் வழங்கப்பட்டுள்ளது. அது முழுவதுமாக தண்ணீர் போன்று இருந்ததால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால் குறித்து புகார் எழுந்துள்ளது. 

உத்திர பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் உள்ள கோட்டா கிராமத்தில் பழங்குடியின மாணவர்கள் அதிகமாகப் பயிலும் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்குப் பயிலும் மாணவர்கள் அனைவரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளியிலேயே தான் உணவு உண்டு வருகிறார்கள்.

water

இவர்களுக்கு நேற்று முன் தினம் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பால் வழங்கப்பட்டுள்ளது. அது முழுவதுமாக தண்ணீர் போன்று இருந்ததால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால் குறித்து புகார் எழுந்துள்ளது.

coojk

அதனையடுத்து, அந்த பள்ளியில் சமையல் வேலை செய்பவர் ஒரு லிட்டர் பாலில் ஒரு பக்கெட் தண்ணீர் ஊற்றி, காய்ச்சி 85 மாணவர்களுக்கு அதனை வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பாலில் தண்ணீர் கலப்பதன் வீடியோவும் பரவி வருகிறது. அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டம் நாட்டில் பள்ளி வயதுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

milj

இதில் இத்தகைய மோசடி நடந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய கல்வித்துறை அதிகாரி, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.