1 கிலோ வெங்காயம் 50 ரூபாய்.. அரை மணி நேரத்தில் வேனில் இருந்த வெங்காயம் அம்புட்டும் காலி !

 

1 கிலோ வெங்காயம் 50 ரூபாய்.. அரை மணி நேரத்தில் வேனில் இருந்த வெங்காயம் அம்புட்டும் காலி !

ஆந்திராவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் திருவள்ளூர் நேதாஜி சாலையில், 2 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்று ஒலிபெருக்கி மூலம் கூறிக்கொண்டே வேனில் வெங்காயங்களைக் கொண்டு சென்றுள்ளார். 

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்திற்கு வரத்து குறைந்து ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.200 வரை விற்கப்பட்டு வந்தது. இதனால், மத்திய அரசு எகிப்தில் இருந்து வெங்காயங்களை வரவழைத்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல், தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைந்து வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு வெங்காய வரத்துச் சற்று அதிகரித்துள்ளது. 

ttn

ஆந்திர மாநில அரசு மானிய விலையில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35க்கு விற்று வருகிறது. இதனை 3 கிலோ மீட்டர் வரை தூரத்தில் நின்று மக்கள் வாங்கி செல்கின்றனர். இதே போலத் தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் திருவள்ளூர் நேதாஜி சாலையில், 2 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்று ஒலிபெருக்கி மூலம் கூறிக்கொண்டே வேனில் வெங்காயங்களைக் கொண்டு சென்றுள்ளார். 

ttn

கடைகளில் ஒரு கிலோ வெங்காயமே ரூ.150க்கு விற்கப்பட்டு வரும் நிலையில் 2 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்குக் கிடைக்கிறது என்றால் மக்கள் வாங்க மறுப்பார்களா என்ன.. அவர் அந்த தெருவுக்குச் சென்ற அரை மணி நேரத்தில் அவர் வேனில் வைத்திருந்த மொத்த வெங்காயம் காலியாகி உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை முந்தியடித்துக் கொண்டு வெங்காயங்களை வாங்கி சென்றுள்ளனர்.