1மோர் நிறுவனத்தின் ஸ்டைலான டுயல் டைனமிக் டிரைவர் ப்ளூடூத் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

1மோர் நிறுவனத்தின் ஸ்டைலான டுயல் டைனமிக் டிரைவர் ப்ளூடூத் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

1மோர் நிறுவனத்தின் ஸ்டைலான டுயல் டைனமிக் டிரைவர் ப்ளூடூத் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை: 1மோர் நிறுவனத்தின் ஸ்டைலான டுயல் டைனமிக் டிரைவர் ப்ளூடூத் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1மோர் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது ஸ்டைலான தோற்றம் கொண்ட டுயல் டைனமிக் டிரைவர் ப்ளூடூத் ஹெட்போன் ஆகும். இந்த புதிய ஹெட்போன் மாடல் காதுகளில் மிகவும் கச்சிதமாக பொருந்தும் தன்மையை கொண்டுள்ளது. மேலும் நெக்பேண்ட், பேட்டரி மற்றும் கன்ட்ரோல்கள் பயனருக்கு மிக அருகில் பொருத்தப்பட்டிருப்பதால் அதை எளிதில் இயக்க முடிகிறது.

தற்போதைக்கு ப்ரீ-ஆர்டர் முறையில் ரூ.4,499 விலையில் தொடங்கியுள்ளது. எனினும் முழுமையான விற்பனை முறையின்போது ரூ.7,499 விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. 1மோர் இந்தியா நிறுவனத்தின் இணையதளம் அல்லது இன்னபிற ஆன்லைன் ஹெட்போன் இணையதளங்களில் இந்த புதிய மாடலை முன்பதிவு செய்து வாங்க முடியும். கிராமி விருது பெற்ற ஒலி பொறியாளர் லூகா பிக்னார்டி இந்த ஹெட்போனின் ஆடியோ டியுனிங்கை மேற்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக இது தரமான ஹெட்போனாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி பெற்றுள்ள இது 3 மணி நேரம் வரை பேட்டரி நீடிக்கும் சக்தி பெற்றதாகும். பிளாக் மற்றும் ரோஸ் ஆகிய இரண்டு நிறங்களில் இந்த புதிய மாடல் ஹெட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுகள் வரும் இன்று முதல் (பிப்ரவரி.1) தொடங்குகிறது. பிப்ரவரி 5 வரை குறைந்தபட்ச விலையில் இந்த ஹெட்போனை வாங்க முடியும்.