கருப்பு பணம் குறித்து தகவல் அளித்தால் ரூ.5 கோடி வரை சன்மானம் – வருமான வரித்துறை அறிவிப்பு !

 

கருப்பு பணம் குறித்து தகவல் அளித்தால் ரூ.5 கோடி வரை சன்மானம் – வருமான வரித்துறை அறிவிப்பு !

கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. கருப்பு பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட பல நிறுவனங்கள் அடையாளம் கண்டு அவற்றை மத்திய அரசு கட்டுப்படுத்தி வைத்துள்ளது. கருப்பு பண பதுக்கல்காரர்களை வருமான வரித்துறை கண்காணித்தாலும், அதையும் தாண்டி வரி ஏமாற்று, கருப்பு பண பதுக்கல் ஆகியவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கருப்பு பணம் குறித்து தகவல் அளித்தால் ரூ.5 கோடி வரை சன்மானம் – வருமான வரித்துறை அறிவிப்பு !

வரி ஏய்ப்பு, கருப்பு பண பதுக்கல் குறித்து வரித்துறைக்கு கிடைக்கும் ரகசியமாக தகவல்கள் அடிப்படையிலும், சோதனைகள் நடத்தி கருப்பு பணத்தை பறிமுதல் செய்யப்படுகின்றன. இப்படி தகவல் அளிப்பவர்களுக்கு வரித்துறை சன்மானங்கள், பாராட்டு சான்றுகளை அளித்து வருகிறது.

தற்போது வருமான வரி இணைய தளத்தில் (https://www.incometaxindiaefiling.gov.in/home) கருப்பு பண பதுக்கல் குறித்து நேரடியாகவே தகவல் அளிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி கருப்பு பணம், பினாமி பரிவர்த்தனை, பினாமி சொத்துகள் மற்றம் வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் குறித்து நேரடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்க முடியும். மத்திய நேரடி வரிகள் ஆணையம் இந்த வசதியை நேற்று அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கெனவே ரகசியமாக தகவல் அளித்ததைப் போல, தற்போது ஆன்லைன் வழியாக வரி ஏமாற்றுபவர்கள், பினாமி சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் குறித்து தகவலை தெரிவிக்க முடியும். தகவல் அளிப்பவர்கள் ஏற்கெனவே ஆதார் அடையாளம், பான் எண் வைத்துள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த அடையாளம் வைத்துள்ள யாராக இருந்தாலும், வருமான வரித்துறை இணைப்பில் சென்று கருப்பு பணம் குறித்த ரகசிய தகவலை அளிக்க முடியும். எனினும் புகார் அளிப்பதற்கு பான் எண், ஆதார் அடையாளங்கள் கட்டாயமில்லை. ஆனால் ஓடிபி பரிசோதனை அடிப்படையில் புகார் உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

தகவல் அளிப்பவர்கள் குறித்த ரகசியத்தை காக்கப்படும் என கூறியுள்ள வருமான வரித்துறை, தகவல் அடிப்படையில் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. இந்த புகாரின் மீது வருமான வரிச் சட்டம், கருப்பு பண பதுக்கல் தடுப்புச் சட்டம், பினாமி சொத்துகள் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு புகாருக்கும் ஒரு எண் கொடுக்கப்படும். அந்த எண் அடிப்படையில், புகாரின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக பார்த்துக் கொள்ள முடியும். தகவல் அளிப்பவருக்கு கிடைக்கும் சன்மானம், பாராட்டு உள்ளிட்ட விவரங்களும் அந்த இணைப்பிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.

கருப்பு பணம் குறித்து தகவல் அளித்தால் ரூ.5 கோடி வரை சன்மானம் – வருமான வரித்துறை அறிவிப்பு !

பினாமி சொத்துகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை சன்மானமாக வரித்துறை வழங்குகிறது. வெளிநாடுகளில் சொத்துகள் பதுக்கல், வரி ஏய்ப்பு குறித்த தகவல்களுக்கு வரித்துறை 5 கோடி ரூபாய் வரை சன்மானமாக அளிக்கிறது. இந்த வகையிலான சன்மானம் ஏற்கெனவே தகவல் அளிப்பவர்களுக்கு வரித்துறை கொடுத்து வருகிறது. சன்மானம் அளிப்பதன் மூலம், கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகள், மறைமுக உரிமையாளர்கள் மற்றும் மறைமுகமாக ஆதாயம் அடைபவர்கள் குறித்த தகவலை அளிக்க மக்கள் முன்வருவார்கள் என்றும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.