4 பேருல யார் பெஸ்ட்?ஆஸி.முன்னாள் கேப்டனின் சாய்ஸ் யாரு

 

4 பேருல யார் பெஸ்ட்?ஆஸி.முன்னாள் கேப்டனின் சாய்ஸ் யாரு

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர்.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்களில் ஜோ ரூட்டை தவிர மற்ற மூவரும் அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடிவருகிறார்கள். ஜோ ரூட் டி20 போட்டிகளில் மட்டும் ஆடுவதில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்திலும் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், ஸ்மித் மற்றும் ரூட் ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றதால் சுமார் கடந்த ஓராண்டாக ஸ்மித் ஆடாததால் புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளார்.

cricket

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி, வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகிய நால்வருமே அபாரமாக ஆடிவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இவர்கள் நால்வரும் அபாரமாக ஆடி, அவரவர் அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுக்கின்றனர். டி20 போட்டிகளில் ரூட் மட்டும் ஆடுவதில்லை. கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகிய மூவரும் அதிலும் முத்திரை பதித்துள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் மூன்று விதமான போட்டிகளிலும் முத்திரை பதித்த இந்த வீரர்களில் யார் சிறந்தவர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிடுவது மிகவும் கடினமான விஷயம். ஆனால் நம்பரின் அடிப்படையிலும் சாதனைகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது கோலி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிடுவார். அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

cricket

போட்டிக்கு போட்டி புதிய மைல்கற்களை எட்டும் கோலி, சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். பேட்டிங் திறமையில் நால்வரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்றாலும், நம்பரின் அடிப்படையில் கோலி முன் நிற்கிறார்.

cricket

இந்நிலையில், கோலி – வில்லியம்சன் – ஸ்மித் – ரூட் ஆகிய நால்வரில் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் வாக் கருத்து தெரிவித்துள்ளார்.

cricket

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டீவ் வாக், விராட் கோலியின் பேட்டிங் டெக்னிக் தான் மற்றவர்களை காட்டிலும் சிறந்தது என கருதுகிறேன். சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விராட் கோலி தான் என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

cricket