வேலைக்கார சிறுமிக்கு கொடுமை: கைதாகிறார் நடிகை பானுப்ரியா?

 

வேலைக்கார சிறுமிக்கு கொடுமை: கைதாகிறார் நடிகை பானுப்ரியா?

14 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக நடிகை பானுப்ரியாவைக் கைது செய்ய ஆந்திர டிஜிபிக்கு அம்மாநில குழந்தைகள் நலத்துறை பரிந்துரை செய்துள்ளது.

சென்னை: 14 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக நடிகை பானுப்ரியாவைக் கைது செய்ய ஆந்திர டிஜிபிக்கு அம்மாநில குழந்தைகள் நலத்துறை பரிந்துரை செய்துள்ளது.

80 மற்றும் 90களில் தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை பானுப்ரியா. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதிலிருந்து விலகிய அவர், பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், பானுப்ரியா தனது வீட்டில் பணியாற்றும் சிறுமி சந்தியாவை கொடுமைப்படுத்துவதாக, அச்சிறுமியின் தாய் பிரபாவதி ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் ஒன்றை அளித்தார்.

banu

பாலியல் தொல்லை:

தனது புகாரில் அவர், ‘மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு எனது மகளை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினோம். ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, மேலும் பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்து வருகிறார்.

மிரட்டல்:
இதுபற்றி அறிந்ததும் நேரில் சென்று கேட்டேன். அப்போது ‘எங்களிடம் பணம் உள்ளது. உன் மகளை திருட்டு பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்’ என மிரட்டினார்கள்” என அச்சிறுமியின் தாய் குற்றம் சாட்டியிருந்தார்.

 

banu

பானுப்ரியா விளக்கம்:
இந்தப் புகார் பற்றி சாமர்லகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பானுப்ரியாவும் தனது பக்க விளக்கத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். தன் வீட்டில் இருந்த பொருட்களை சந்தியா திருடியதாகவும், அதை கண்டுபிடித்துவிட்டதால் தங்கள் மீது வீண் பழி போடுகிறார்கள்’ என அவர் தெரிவித்தார்.

சிறுமியின் விசாரணை:
அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி சந்தியாவை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவரை குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தினர். அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அந்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

banu

கைது செய்ய பரிந்துரை:
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பானுப்ரியாவைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஆந்திர குழந்தைகள் நலத்துறை, அம்மாநில டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது. 14 வயது சிறுமியை பானுப்ரியா தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தியது தவறு எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

திரையுலகம் அதிர்ச்சி:
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பானுப்ரியாவைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஆந்திர குழந்தைகள் நலத்துறை, அம்மாநில டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது. 14 வயது சிறுமியை பானுப்ரியா தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தியது தவறு எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.