வங்காள மொழியில் சன் டிவியின் புதிய சேனல் தொடக்கம்!

 

வங்காள மொழியில் சன் டிவியின் புதிய சேனல் தொடக்கம்!

தமிழகத்தில் எப்போதுமே தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருந்து கொண்டு வருகிறது

தமிழகத்தில் எப்போதுமே தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருந்து கொண்டு வருகிறது.

அப்படி தமிழில் இருக்கும் தொலைக்காட்சிகளில் முன்னிலையில் இருப்பது சன் டிவி தான் . இதுநாள் வரை இந்த தொலைக்காட்சியின் டிஆர்பியை யாராலும் வெல்ல முடியவில்லை. தற்போது ‘சென் பங்களா’ என்ற பெயரில் புதிய சேனலை ஆரம்பித்துள்ளனர். அதுவும் பிப்ரவரி 3ம் தேதியில் இருந்து ஒளிப்பரப்பாகுமாம் , சன் பங்களா தொலைக்காட்சிக்கான முதல் வருடத்தில் மட்டும் ரூ. 150 கோடி செலவு செய்ய போகிறார்களாம்.

ஏற்கெனவே, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு சேனல்களை நடத்திவரும் சன் குழுமத்தில் சென் பங்களா சேனல் புதிய வரவாகும்.இது முழுக்க முழுக்க பொழுது போக்கு சேனலாக உள்ளது.