ஹ்ரித்திக் ரோஷனுக்கு ரொம்ப புடிச்ச தமிழ் நடிகர் யார் தெரியுமா?

 

ஹ்ரித்திக் ரோஷனுக்கு ரொம்ப புடிச்ச தமிழ் நடிகர் யார் தெரியுமா?

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்கள் மிகவும் பிடிக்குமாம்.

சென்னை: பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்கள் மிகவும் பிடிக்குமாம்.

தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் தனித்துவமான வச உச்சரிப்பினால் மக்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. எவ்விதமான சினிமா பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் கடும் உழைப்பினால் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்துள்ளார்.

vijaysethupathi

கோலிவுட் மட்டுமின்றி விஜய் சேதுபதிக்கு பாலிவுட் வரை ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னை வந்த பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், தனக்கு விஜய் சேதுபதி என்றால் ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

vikramvedha

தமிழில் ‘விக்ரம் வேதா’ திரைப்படம் மிகவும் பிடித்த படம் என்ற ஹ்ரித்திக், தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துக் கொண்டிருந்தாலும், தற்போதைக்கு தமிழில் நடிப்பது குறித்து யோசிக்கவில்லை என்றும், விரைவில் நடிப்பேன் என்றும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.