ஹோலி பண்டிகையை முன்னிட்டு லாவா ஏ1 கலர்ஸ் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம்

 

ஹோலி பண்டிகையை முன்னிட்டு லாவா ஏ1 கலர்ஸ் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம்

லாவா ஏ1 கலர்ஸ் மொபைல் போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

டெல்லி: லாவா ஏ1 கலர்ஸ் மொபைல் போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு லாவா ஏ1 கலர்ஸ் எனும் ஸ்பெஷல் எடிஷன் என்ட்ரி லெவல் மொபைல் போனை லாவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலிகார்பனைட் பாடி, இன்ஸ்டண்ட் டார்ச், ஆட்டோ கால் ரெக்கார்டிங், 1.8 இன்ச் டி.எஃப்.டி டிஸ்பிளே, 0.3 எம்.பி கேமரா, 800 எம்.ஏ.ஹெச் பேட்டரி, கான்டாக்ட்களில் புகைப்படம் வைக்கும் வசதி, கால்குலேட்டர், ஸ்டாப்வாட்ச், காலண்டர், அலாரம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த போனின் பேட்டரி சுமார் மூன்று நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. ஆங்கிலம் உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, பஞ்சாபி மற்றும் குஜராத்தி என ஏழு மொழிகளில் இந்த மொபைல் போனை இயக்கலாம். லாவா ஏ1 கலர்ஸ் லைட் புளூ, கிரீன் மற்றும் மெஜன்டா ரெட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுக்க ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒரு வருடத்திற்கு ரீபிளேஸ்மென்ட் வாரண்டி வழங்கப்படுகிறது.