ஹோட்டல் ரகசியங்களை வெளியிட்டு மோதும் நடிகை மெஹ்ரீன் கவுர்- தயாரிப்பாளர் நாகா ஷவுரியா..

 

ஹோட்டல் ரகசியங்களை வெளியிட்டு மோதும் நடிகை மெஹ்ரீன் கவுர்- தயாரிப்பாளர் நாகா ஷவுரியா..

கதாநாயகி மெஹ்ரீன் கவுர் பிர்சாடா மற்றும் தயாரிப்பாளர் நாகா ஷவுரியா (ஈரா கிரியேஷன்ஸ்) ஆகியோருக்கு இடையிலான மோதல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன . தயாரிப்பாளர்களின் முறையற்ற அணுகுமுறையைப் பற்றி மெஹ்ரீன் பேசியதற்க்கு பதிலடியாக , நாகா ஷவுரியாவின் தயாரிப்பு நிறுவனம் அஸ்வதாமாவுக்காக மெஹ்ரீனுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தியது.

தமிழில் பட்டாஸ்,நோட்டா போன்ற படங்களிலும் ,தெலுங்கில் அஸ்வதாமா  படத்திலும் நடித்த பிரபல கதாநாயகி மெஹ்ரீன் கவுர் பிர்சாடா மற்றும் தயாரிப்பாளர் நாகா ஷவுரியா (ஈரா கிரியேஷன்ஸ்) ஆகியோருக்கு இடையிலான மோதல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன . தயாரிப்பாளர்களின் முறையற்ற அணுகுமுறையைப் பற்றி மெஹ்ரீன் பேசியதற்க்கு பதிலடியாக , நாகா ஷவுரியாவின் தயாரிப்பு நிறுவனம் அஸ்வதாமாவுக்காக மெஹ்ரீனுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தியது.எப்படியிருந்தாலும், இவர்களின் மோதலினால் யாருக்கு பயன் ?

nota.jpg

உண்மையில் மெஹ்ரீன் தனது ஹோட்டல் பில்கள் பற்றிய செய்தியை தனது பி.ஆர் குழு மூலம் ஊடக மக்களுக்கு கசியவிட்டிருக்கக்கூடாது. பின்னர், தயாரிப்பாளர்கள் மொத்த பில் விவரங்களை வலைத்தளங்களுக்கு கசியவிட்டிருக்கக்கூடாது.அவ்வாறு செய்ததன் மூலம், இருவரும் படத்தின் பெயரால்  என்ன செய்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுள்ளனர்.
இந்த விஷயம்  திரையுலகில் மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். நாளை மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் மெஹ்ரீனை  நடிக்க புக்  செய்வது பற்றி கவலைப்படக்கூடும், அதே நேரத்தில் மற்ற கதாநாயகிகள் நாகா ஷவுரியாவின்  பேனரிலும் நடிக்க  ஆர்வம் காட்ட மாட்டார்கள். மெஹ்ரீன் மற்றும் ஷவுரியா இருவரின்  இந்த பொதுக் குற்றச்சாட்டுகள் அவர்களின்  முன்னேற்றத்திற்கு தேவையற்ற தடைகளைச் சேர்க்கும்.

ஒரு படம் சூப்பர் ஹிட்டாக மாறும் போது, இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் பெரிதாக தெரியாது.ஆனால் ஒரு படம் தோல்வியடையும் போது,சின்ன விஷயம் கூட பெரிதாக தெரியும் . அதனால்  இவை திரைப்படத்தின்  முடிவைப் பாதிக்கும் விஷயங்கள்.