ஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா? அதிர்ச்சித் தகவல் 

ஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா? அதிர்ச்சித் தகவல் 

ஹை ஹீல்ஸ் அணிந்து நீங்கள் நடக்கும் போது அழகாகத் தான் இருக்கும். ஆனால் அதனோடு ஆபத்தும் உங்களைத்  தேடி வரும். “ஹை ஹீல்ஸ் கால்வலி மாதிரியான சில விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதை நிறுத்திய பாடில்லை. பெண்கள் பெரும்பாலும் ஃபேஷனுக்காக செய்யும் தியாகங்களுக்கு அதற்குப் பின்னர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இன்றைய பெண்கள் தங்களை அழகாக காண்பிக்க எதுவும்  செய்யத்  தயாராக இருக்கிறார்கள். தீங்கு விளைவிக்கக்கூடிய  காஸ்மெடிக்ஸ், லிப்ஸ்டிக், ஷாம்பு போன்றவற்றை அதிகமாக  பயன்படுத்துகின்றனர். அந்த வரிசையில் தங்களை உயரமாகவும் அழகான நடையுடனும் காண்பிக்க ஹை ஹீல்ஸ் பயன்படுத்துகின்றனர்.

ஹை ஹீல்ஸ் அணிந்து நீங்கள் நடக்கும் போது அழகாகத் தான் இருக்கும். ஆனால் அதனோடு ஆபத்தும் உங்களைத்  தேடி வரும். “ஹை ஹீல்ஸ் கால்வலி மாதிரியான சில விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதை நிறுத்திய பாடில்லை. பெண்கள் பெரும்பாலும் ஃபேஷனுக்காக செய்யும் தியாகங்களுக்கு அதற்குப் பின்னர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

high heels

ஹை ஹீல்ஸ் ஷூக்கள் அணிவது பெண்களின் முதுகெலும்பு, இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால் மற்றும் கால்களையும் உங்கள் நடையின் தோரணையும் மறைமுகமாக பாதிக்கும், ”என்கிறார் எலும்பியல் மற்றும் கூட்டு மாற்று நிபுணர் டாக்டர் ஜதிந்தர் பிர் சிங் ஜாகி.

ஹை ஹீல்ஸ் எவ்வாறு பாதிப்பை ஏற்படுகிறது?

ஹை ஹீல்ஸ் அணியும் போது இடுப்பு மற்றும் முதுகெலும்புகள் வளைகிறது. அப்படி நடக்கும் போது அந்த வளைவை ஈடுசெய்ய மனித உடல் முயற்சிக்கிறது. ஹை ஹீல்ஸ் குறிப்பாக, கணுக்கள், இடுப்பு மற்றும் பின்புற தசைகள் தீவிர அழுத்தத்தில் இருக்கும். இதனால் அதிகப்படியான தசை சோர்வு மற்றும் அழுத்தம் ஏற்படுகிறது. தட்டையான காலணி அணியும் போது முதுகெலும்பு மிகவும் நேராக இருக்கும், பாதங்கள் தட்டையாக இருக்கும்போது தசை தளர்வாக இருக்கும், மேலும் உங்கள் எடை முழுவதும் காலின் அனைத்து பகுதிகளிலும் பரவி தாங்கப்படும். 

high heels

ஹை ஹீல்ஸுடன் நடக்கும் போது மார்பு முன்னோக்கி தள்ளப்படுகிறது, 
இடுப்பு மற்றும் முதுகெலும்புகளை அவற்றின் நேரான நிலையிலிருந்து மாற்றி முன்னோக்கி தள்ளச் செய்கிறது. மேலும் முழங்கால்களுக்கு அதிக அழுத்தம் உருவாகிறது
மேலும் ஹீல்ஸ் அணியும் கால்கள் கீழ் நோக்கி இருப்பதால்  கால்விரல்களின் மீது அதிக அழுத்தம் உருவாகிறது. இவ்வாறு ஹை ஹீல்ஸ் அணிவதால் வரும் தீங்குகளை சொல்லிக்கொண்டே போகலாம்.