ஹைதராபாத்: கோல்கொண்டாவில் பீதியை ஏற்படுத்திய காட்டுப் பூனையை பிடித்த வனத்துறை அதிகாரிகள்

 

ஹைதராபாத்: கோல்கொண்டாவில் பீதியை ஏற்படுத்திய காட்டுப் பூனையை பிடித்த வனத்துறை அதிகாரிகள்

கோல்கொண்டாவில் பீதியை ஏற்படுத்திய காட்டுப் பூனையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

ஹைதராபாத்: கோல்கொண்டாவில் பீதியை ஏற்படுத்திய காட்டுப் பூனையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

கோல்கொண்டா கோட்டையின் ஃபதேஹ் தர்வாஸாவிற்கு அருகிலுள்ள நூரானி மஸ்ஜித்தில் ஒரு காட்டுப் பூனையைப் பார்த்தவர்கள் அதை கருஞ்சிறுத்தை என எண்ணியதால் அது வதந்தியாக பரவியது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் கருஞ்சிறுத்தைக்கு பயந்து தூங்காமல் விழித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வனத்துறை அதிகாரிகள் கருஞ்சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். வன அதிகாரிகள் குழு அந்த விலங்கை பிடித்து பார்த்தபோது அது ஒரு சிவெட் பூனை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த விலங்கை வனத்துறை அதிகாரிகள் நேரு விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

civet cat

இன்னொரு சம்பவத்தில,  மைலர்தேவ்பள்ளியில் உள்ள கேடான் பாலத்தின் அண்டர்பாஸ் சாலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிறுத்தையை பிடிக்க வன அதிகாரிகள் முயற்சிகள் செய்தனர். அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகரித்த பின்னரும் அந்த சிறுத்தை அந்த இடத்திலிருந்து நகரவில்லை.

அந்த சிறுத்தை காயமடைந்ததாக வன அதிகாரிகள் எண்ணினர். அந்த சிறுத்தை அருகிலுள்ள விவசாய வயல்களில் ஒரு நபரை காயப்படுத்தியதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.