ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம் !

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம் !

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்கச் சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கேட்க வேண்டும் என்றும் அத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மக்களிடமும் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை இருந்து வந்தது. 

ஹைட்ரோகார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இருப்பினும், ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதனால் பாதிப்பும்  ஏதும் இருக்காது என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்கச் சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கேட்க வேண்டும் என்றும் அத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மக்களிடமும் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை இருந்து வந்தது. 

y

ஆனால் சமீபத்தில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்க வேண்டாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்தது. இதனால், எந்த நிறுவனம் வேண்டுமானாலும் எந்த இடத்திலும் இந்த திட்டத்தை செயல் படுத்தலாம் என்னும் சூழல் நிலவி வருகிறது.  இதற்கு, டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதுமட்டுமில்லாமல்,  நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்னும் கொள்கை முடிவு செய்யப்பட்டது. 

ttn

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த  கடிதத்தில், டெல்டா மாவட்ட மக்களின் முடிவைக் கேட்காமல்  ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.