ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு

 

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குத்  தடை விதிக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு

மீபத்தில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்க வேண்டாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்தது.

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்கச் சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கேட்க வேண்டும் என்றும் அத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மக்களிடமும் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்க வேண்டாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்தது.

ttnn

இதனால், எந்த நிறுவனம் வேண்டுமானாலும் எந்த இடத்திலும் இந்த திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்னும் சூழல் நிலவி வருகிறது.  இதற்கு, டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 

இந்நிலையில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.ஆர்.பாண்டியன் சார்பாக,  வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி   உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு  மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.