ஹைட்ராக்ஸி மாத்திரை தேவை இருந்தும் தானம் செய்த நாடு எது? – வைரல் ஆகும் கஸ்தூரி ட்வீட்

 

ஹைட்ராக்ஸி மாத்திரை தேவை இருந்தும் தானம் செய்த நாடு எது? – வைரல் ஆகும் கஸ்தூரி ட்வீட்

இன்று உலக மலேரியா தினம். எது மலேரியாவை குணப்படுத்தும் என்று தெரியுமா? ஹைட்ராக்ஸிகுரோரோகுயின். எதை இது குணப்படுத்தாது தெரியுமா? கோவிட்19. யாருக்கு இது அதிகம் தேவை தெரியுமா? காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள தட்பவெப்பநிலை கொண்ட பகுதிக்கு. யார் இதை அதிகம் வாங்கி வைத்துள்ளது தெரியுமா?

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை தேவை இருந்தும் ஏற்றுமதி செய்த நாடு எது என்று நடிகை கஸ்தூரி ட்வீட் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கஸ்தூரி இன்று ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “இன்று உலக மலேரியா தினம். எது மலேரியாவை குணப்படுத்தும் என்று தெரியுமா? ஹைட்ராக்ஸிகுரோரோகுயின். எதை இது குணப்படுத்தாது தெரியுமா? கோவிட்19. யாருக்கு இது அதிகம் தேவை தெரியுமா? காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள தட்பவெப்பநிலை கொண்ட பகுதிக்கு. யார் இதை அதிகம் வாங்கி வைத்துள்ளது தெரியுமா? அமெரிக்கா. யார் இதை கொடுத்தது தெரியுமா? இந்தியா” என்று கூறியுள்ளார்.

தேவை அதிகம் இருக்கும் என்று தெரிந்தும் மலேரியாவுக்கான மருந்தை அமெரிக்காவுக்கு அதிக அளவில் இந்தியா கொடுத்துள்ளது என்ற வகையில் அவர் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். கஸ்தூரியின் பதிவுக்கு பதில் அளித்த ஒருவர், “தசாவதாரம்ல ஒரு சீன்ல, புஷ் NACL-ன்னா என்னன்னு கேட்குற மாதிரி இருக்கும்…அப்போ படம் பார்த்தப்ப ஒரு அதிபரை இவ்வளவு மோசமா சித்தரிச்சு இருக்காங்களேன்னு தோனுச்சு…ஆனா,இப்ப ட்ரம்பு பேசுறதெல்லாம பார்த்தா..12 வருசம் முன்னாடியே எவ்வளவு கரெக்டா யோசிச்சிருக்காங்கன்னு ஆச்சரியமா இருக்கு!” என்று கூறியுள்ளார்.