ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை கொரோனா நோய் தடுப்பு மருந்தாக வழங்க மகாராஷ்டிரா அரசு யோசனை

 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை கொரோனா நோய் தடுப்பு மருந்தாக வழங்க மகாராஷ்டிரா அரசு யோசனை

மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை கொரோனா நோய் தடுப்பு மருந்தாக வழங்க மகாராஷ்டிரா அரசு தீவிரமாக யோசனை செய்து வருகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தற்போது அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவி போன்ற பகுதிகளில் தற்போது ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து அம்மாநில அரசு கலக்கம் அடைந்துள்ளது.

தாராவி

இந்த நிலையில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை நோய் தடுப்பு மருந்தாக சேரியில் வாழும் மக்களுக்கு கொடுப்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டப்படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நோய் தடுப்பு மருந்தாக வழங்கினால், சமூக மட்டத்தில் கோவிட்-19க்கு எதிராக தற்காப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சல்பேட் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சல்பேட்

கொரோனா வைரஸ் உருவான சீனாவை காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தி பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்ததாக தெரிகிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு உடனடியாக ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.