ஹைட்ராக்ஸி குளோரைட் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியா என்ன செய்யும்? – ஜோதிமணி எம்.பி அச்சம்

ஹைட்ராக்ஸி குளோரைட் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியா என்ன செய்யும்? – ஜோதிமணி எம்.பி அச்சம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மலேரியாவுக்கான மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கரூர் எம்.பி ஜோதி மணி அச்சம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஏற்கனவே N95 முககவசம், வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு நீண்டகாலம் மோடி தடை விதிக்காததால் தட்டுப்பாடு நிலவுகிறது.இப்பொழுது அமெரிக்க அதிபரின் மிரட்டலுக்குப் பயந்து கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் ஏற்றுமதிக்கும் மோடி அனுமதித்திருப்பது.

hydroxychloroquine

இந்திய மக்களை மிகப்பெரிய ஆபத்தில் தள்ளும்.
ஒரு தேசம் இன்னொரு தேசத்தை நெருக்கடி காலத்தில் மனிதாபிமான அடிப்படையில் உதவி கேட்பது இயற்கையானது. ஆனால் தராவிட்டால் இந்தியா பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைப் பார்த்து அமெரிக்க அதிபர் மிரட்டுவதும் அதற்கு இந்தியப் பிரதமர் உடனடியாகப் பணிவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் பரஸ்பரம் வேண்டிப் பெறுபவை. இங்கே ட்ரம்ப் மிரட்டிப் பெற்றிருக்கிறார். நாளை இந்த மருந்து கையிருப்பில் இல்லை என்றால் இந்திய மக்களின் நிலைமை?

10 நாட்களுக்கு முன்பு கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைக்களுக்கு 17 வென்டிலேட்டர்கள் வாங்க MP நிதி ஒதுக்கினேன். இன்றுவரை ஒன்று கூட வாங்கப்படவில்லை. தட்டுப்பாடு என்று சொல்கிறார்கள். வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு உடனடியாக தடைவிதிக்காததால் ஏற்பட்ட பிரச்னை இது. இதே நிலைதான் நாளை மருந்துக்கும் ஏற்படும். நினைத்தாலே அச்சமாக உள்ளது. இந்தச் சூழலில் வரும் முன் காப்புதான் ஒரே வழி. யாரும் வீட்டைவிட்டு வெளியில் வராதீர்கள்” என்று கூறியுள்ளார்.