ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழா…6 மாநில முதல்வர்கள், முக ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு!

 

ஹேமந்த் சோரன் பதவியேற்பு  விழா…6 மாநில  முதல்வர்கள், முக ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு!

முதல்வர்கள், எதிர்க்கட்சி  தலைவர்கள் பங்கேற்கும் இந்த பதவியேற்பு விழா தேசிய அரசியல் களத்தில்  முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில்  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வென்றது. இதனால்  அம்மாநில முதல்வராக  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.

ttn

இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட ஆறு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.  பல்வேறு மாநில  முதல்வர்கள், எதிர்க்கட்சி  தலைவர்கள் பங்கேற்கும் இந்த பதவியேற்பு விழா தேசிய அரசியல் களத்தில்  முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 

ஆறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு 
  • மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 
  • ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட்
  • மத்தியப் பிரதேச முதல்வர்  கமல் நாத்
  • சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் 
எதிர்க்கட்சித் தலைவர்கள் 
  • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
  • காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
  • திமுக தலைவர் ஸ்டாலின்
  • பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 
  • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்
  • சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 
  • ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்
  • மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி