‘ஹெல்மெட் போடல ஃபைன் கட்டு’.. வாக்குவாதம் முற்றியதால் இளைஞரைக் கட்டையால் அடித்த டிராபிக் போலீஸ்!

 

‘ஹெல்மெட் போடல ஃபைன் கட்டு’.. வாக்குவாதம் முற்றியதால் இளைஞரைக் கட்டையால் அடித்த டிராபிக் போலீஸ்!

புதிய மோட்டார் வாகன அமல்படுத்தியதில் இருந்து டிராபிக் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய மோட்டார் வாகன அமல்படுத்தியதில் இருந்து டிராபிக் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஓட்டேரி அருகே உள்ள புளியந்தோப்பு காவல் சிறப்பு  உதவி ஆய்வாளர் ரமேஷ் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த சுரேந்தர்(19) என்னும் இளைஞர் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். அதனால் அவரை மடக்கிப் பிடித்த ரமேஷ் அபராதம் செலுத்தும் படி சுரேந்தரிடம் கூறியுள்ளார். இதில் காவலர் ரமேஷுக்கும் சுரேந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது சற்று நேரத்தில் கைகலப்பாக மாறியதில், ரமேஷ் சுரேந்தரை கட்டையால் அடித்ததாகக் கூறப்படுகிறது. 

ttn

அதனால் சுரேந்தரின் தலையில் ரத்தம் வடிந்ததை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அதற்கு காரணமான ரமேஷை தாக்க முயன்றுள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற  ஓட்டேரி இன்ஸ்பெக்டர் அந்த கூட்டத்தைக் கலைத்துவிட்டு சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். போக்குவரத்து காவலர் கட்டையால் தன்னை தாக்கியதாக போலீசார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.