ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு லட்டுக்கொடுத்து வரவேற்ற காவல்துறையினர்!

ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு லட்டுக்கொடுத்து வரவேற்ற காவல்துறையினர்!

கேரளாவில் ‘ஹெல்மெட்’ அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் ‘லட்டு’ கொடுத்து, நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கேரளாவில் ‘ஹெல்மெட்’ அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் ‘லட்டு’ கொடுத்து, நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Ladoo

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், விதிமீறல்களுக்கான அபராத கட்டணங்களை 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச்சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தும் காவல்துறையினர், அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டும் விதமாக ‘லட்டு’ வழங்குகின்றனர். இன்றுதான் ‘லட்டு’ நாளையும் ஹெல்மெட் அணியவில்லை எனில், அபராதம் என அறிவுறுத்துகின்றனர் பாலக்காடு போக்குவரத்து காவல்துறையினர். இந்த காட்சிகள் வைரலாகியும் வருகின்றன.