ஹெல்மெட் அணியாமல் வந்த நடிகர்: போலீசார் செய்த நூதன காரியம்!

 

ஹெல்மெட் அணியாமல் வந்த நடிகர்: போலீசார் செய்த நூதன காரியம்!

ஹெல்மெட் அணியாமல் சென்ற  நடிகர், போலீசார் முன்னிலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக வெளியிட்ட வீடியோ  வைரலாகி வருகிறது. 

லால்குடி: ஹெல்மெட் அணியாமல் சென்ற  நடிகர், போலீசார் முன்னிலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக வெளியிட்ட வீடியோ  வைரலாகி வருகிறது. 

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி  வருபவர்களுக்கு போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் வழக்கத்திற்கு  வந்துள்ளனர். இருப்பினும் ஊரக பகுதிகளில் இன்னும் கூட பலர் ஹெல்மெட் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.

ramesh

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி  லால்குடியில் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரஜினி முருகன், சென்னை-28, மெர்சல், விஸ்வாசம், சண்டைக்கோழி -2 உள்ளிட்ட படங்களில் நடித்த துணை நடிகரும், டிக் டாக் பிரபலமுமான  லால்குடி பகுதியைச் சேர்ந்த திருச்சி ரமேஷ்  தனது மனைவியுடன் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். இதைக்கண்ட போலீசார் அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அபராத தொகையைச் செலுத்திய ரமேஷ் அங்கிருந்து செல்ல தயாரானார்.

ramesh

அப்போது சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் நீங்கள் நடிகர் தானே? ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்று பதிவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்க, ரமேஷும் டிக் டாக்கில்  வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், நானும்  என் மனைவியும் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்தோம்.எங்களை சப் இன்ஸ்பெக்டர் பிடித்து அபராதம் போட்டார். நான் ஏற்கனவே ஒருமுறை பைக்கிலிருந்து கீழே விழுந்த போதே என்னை பலரும் ஹெல்மெட் அணியும் படி கூறினார்கள். இப்பொது போலீஸிடம்  மாட்டிக்கொண்டேன். நான் அவர்களிடம் நடிகர் என்று கூறினேன். ஆனால்  அதற்கு அவர்களோ, நடிகர் என்றால் கீழே விழும் போது  காயம் படாதா?செல்போனை பாதுகாக்கக் கவர் போடுறீங்க? உயிரை பாதுகாக்க தலைக்கு ஹெல்மெட் போட மாட்டிங்களா? என்று கேட்டார். இனி நான் ஹெல்மெட் போட்டுத்தான்  வண்டி ஓட்டுவேன். நீங்களும் ஹெல்மெட் போடுங்கள்’ என்று அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை இதுவரை 30 லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.