ஹெல்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு அபராதம்! போக்குவரத்து போலீசாரின் அட்டூழியம்!

 

ஹெல்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு அபராதம்! போக்குவரத்து போலீசாரின் அட்டூழியம்!

இந்தியா முழுவதும் வேலை நாட்களில் மாலை 5 மணியைக் கடந்தும், சம்பளம் இல்லாமல் அதிக நேரம் விழித்திருந்து அரசு வேலையை செய்து வருபவர்கள் இரண்டே துறைகளைச் சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள்.  இவர்களுக்கு ஓவர் டைம் பணி செய்வதற்கான சம்பளம் அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை என்றாலும் கூட கடமையை ஆற்றி வருகிறார்கள்.

இந்தியாவில் பெரும்பாலான பத்திர பதிவு அலுவலகங்களும், போக்குவரத்து காவலர்களும் தான் அதிக வருமானத்திற்காக இப்படி வேலைப் பார்த்து வருகிறார்கள். இந்திய முழுவதும் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததன் காரணமாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் வசூலிக்கும் அபாரதத் தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. சும்மாவே பகல் நேரங்களிலும் வண்டியின் லைட் எரியலை, ஓவர் ஸ்பீட், மதிக்காமல் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாய் என்று காரணங்களை அடுக்கி வைத்து, கறாராக கமிஷன் கறந்து விடும் காவல் துறையின் சில கறுப்பு ஆடுகளுக்கு இந்த சட்டம் கமிஷன் கறப்பதற்கு மேலும் வசதியாய் போய்விட்டது.

driver

கோர்ட்ல கட்டினா ஐயாயிரம் ரூபாய்.. என்கிட்டே கொடுத்தா இரண்டாயிரம் ரூபாய் என்று 100 களில் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஆயிரங்களில் சகஜமாக கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவைச் சேர்ந்த நிரன்கர் சிங் என்பவர், பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு பஸ்கள் இயக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.  இம்மாதம் 11-ம் தேதி நிரன்கர் சிங்கிற்கு  போக்குவரத்து துறை சார்பில் ஆன்லைனில் அபராதம் செலுத்த சலான் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். என்னவோ, ஏதோ என்று பதறியபடி, அபராததிற்கான காரணத்தை பார்த்த நிரன்கர் சிங் அதிர்ந்து போனார். இவருடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் டிரைவர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல்  பஸ்ஸை ஓட்டிச் சென்றாதகவும் பஸ்ஸின் பதிவு எண்களை எல்லாம் குறிப்பிட்டு, அதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு அட்டூழியம் செய்திருக்கிறார்கள்!