ஹெல்மெட்டுக்கு மட்டும் தான் அபராதமா? கொந்தளிக்கும் பொதுமக்கள்! அதிர்ச்சியில் போலீசார்!

 

ஹெல்மெட்டுக்கு மட்டும் தான் அபராதமா? கொந்தளிக்கும் பொதுமக்கள்! அதிர்ச்சியில் போலீசார்!

இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதும், சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத் தொகையாக பன்மடங்கு வசூலிக்கும் நிலைமை ஏற்பட்டது. சாலை விதிமுறைகளை மீறுபவர்களிடம் வசூலிக்கும் அபராத தொகை மட்டுமே தனியொருவரிடம் லட்சங்களைக் கடந்த நிகழ்வு எல்லாம் அரங்கேறியது. போலீசாரும் அபராதத் தொகை அதிகம் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக முன்பை விட, இன்னும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சாலை விதிமுறைகளை மீறுபவர்களிடம் கறாராக அபராதத் தொகையை வசூல் செய்து வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதும், சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத் தொகையாக பன்மடங்கு வசூலிக்கும் நிலைமை ஏற்பட்டது. சாலை விதிமுறைகளை மீறுபவர்களிடம் வசூலிக்கும் அபராத தொகை மட்டுமே தனியொருவரிடம் லட்சங்களைக் கடந்த நிகழ்வு எல்லாம் அரங்கேறியது. போலீசாரும் அபராதத் தொகை அதிகம் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக முன்பை விட, இன்னும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சாலை விதிமுறைகளை மீறுபவர்களிடம் கறாராக அபராதத் தொகையை வசூல் செய்து வருகிறார்கள். இதன் மூலம் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுவது எல்லாம் சரி தான். ஆனால், அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன் மட்டுமே போலீசார் செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

helmet

இந்த அபராத கட்டணங்களின் உயர்வைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் அவர்களது கருத்துக்களையும் பதிவேற்றி வருகிறார்கள். வெறும் ஹெல்மெட் அணிவதால் மட்டுமே உயிரிழப்பை தடுத்து நிறுத்திவிட முடியும் என்று அரசு நினைக்கிறதா… ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்தாலும், நாம் பயணிக்கும் சாலைகளின் வசதிகள் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று அரசுக்குத் தெரியாதா? இதே சாலைகளில் தானே நீதிபதிகளும், அமைச்சர்களும் பயணிக்கிறார்கள்.. ஹெல்மெட் அணியாமல் வானத்தை இயக்குபவர்களுக்கு அபராதம் விதிப்பது எல்லாம் சரி தான்.. ஆனால், இந்த ஒரு நாள் மழைக்கே சென்னையின் பல இடங்களில் சாலைகள் பள்ளம் பள்ளமாக பல்லிளித்துக் கொண்டிருக்கிறதே சாலைகளைத் தரமானதாக போடாமல் ஏமாற்றியவர்களுக்கு அபராதம் எல்லாம் கிடையாதா என்றும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அப்படி தரமில்லாமல் சாலைகளைப்போடும் ஒப்பந்ததாரர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று இந்தியா முழுக்கவே குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

roads

தொடர்ந்து கழிவுநீர், குடிநீர், தொலைபேசி, மின்சார வாரியம் என்று பல்வேறு பணிகளுக்காக ஏற்கெனவே தரமில்லாத சாலையைத் தோண்டி, வேலை முடிந்ததும் அப்படியே போட்டு விட்டுச் செல்லும் ஊழியர்களுக்கு எல்லாம் யார் அபராதம் விதிப்பார்கள்?  சென்னை நகரில் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கிறது. இதில் மெட்ரோ ரயில் வேலைகளுக்காக இன்னும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் போக்குவரத்தை காவலர்கள் சரிப்படுத்துவதே இல்லை. நிற்க வேண்டிய சாலைகளின் சந்திப்புக்களில் நின்று போக்குவரத்தை சீர் செய்யாமல், சாலைகளின் மறைவில் நின்றுக் கொண்டு அபராதம் வசூலிப்பதிலேயே குறியாய் இருக்கும் காவலர்களின் மீது யார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பார்கள் என்றும் மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
தீபாவளிக்கான டிக்கெட்கள் இப்போதே தீர்ந்து விட்டன. பண்டிகை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள், அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்துகள், பழுதடைந்து விழுந்து கிடக்கும் சிக்னல்கள், காலை நேரங்களில் வயிற்றைப் பிதுக்கிக் கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் மாநகர பேருந்துகள், எந்த சட்டத்திற்கும் அடங்காமல் தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் ஒப்பந்த தண்ணீர் லாரிகள் போன்றவைகளாலும் தானே அதிகமான அளவு விபத்துகள் நேர்கிறது. அடிப்படை சாலைக் கட்டமைப்பைச் சரி செய்து விட்டு தானே அபராதம் வசூலிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்!