ஹெல்மெட்டில் விஷப்பாம்பு… அதிர்ச்சியில் அட்மிட் ஆன ஆசிரியர்!

 

ஹெல்மெட்டில் விஷப்பாம்பு… அதிர்ச்சியில் அட்மிட் ஆன ஆசிரியர்!

கேரளாவில் ஆசிரியர் ஒருவர் அணிந்திருந்த ஹெல்மெட்க்குள் பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 5ம் தேதி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் ஹெல்மெட் அணிந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்

கேரளாவில் ஆசிரியர் ஒருவர் அணிந்திருந்த ஹெல்மெட்க்குள் பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 5ம் தேதி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் ஹெல்மெட் அணிந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். சில கிலோ மீட்டர் சென்ற நிலையில் ஏதோ உருத்தவே, வண்டியை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை கழற்றியுள்ளார். அப்போது ஹெல்மெட்க்குள் இருந்து பாம்பு விழுந்துள்ளது. இதனால், பதறிய ரஞ்சித் உடனடியாக தன்னுடைய நண்பருக்கு தகவல் தெரிவித்து வரச் சொல்லியிருக்கிறார். அவர் வந்ததும் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி தன்னை பாம்பு கடித்ததா என்று பரிசோதிக்கும்படி கேட்டுள்ளார்.

helmet

அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் பாம்பு கடித்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று கூறி, ரத்தப் பரிசோதனையும் செய்தனர். அந்த சோதனையிலும் பாம்பு கடிக்கவில்லை என்பது உறுதியானது. மருத்துவர்கள் கூறியதால் நிம்மதியடைந்த ரஞ்சித், வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அந்த ஹெல்மெட்டை தீவைத்து எரித்தார். இதற்குள் விவரம் அறிந்து அருகிலிருந்தவர்கள் எல்லோரும் ரஞ்சித்திடம் நலம் விசாரிக்க வந்தனர். 

he

ஹெல்மெட்க்குள் பாம்பு இருந்தும் அது இளைஞரைத் தீண்டாதது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக தனக்கு ஆபத்து என்று உணரும்போதுதான் பாம்பு தீண்டும். நல்ல வேலையாக ரஞ்சித் ஏதும் செய்யாதது அவரது உயிரைக் காப்பாற்றியது.